Shobha Karandlaje: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னமும் குழந்தையாகவே இருக்கிறார் என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான சோபா கரந்லஜே கூறினார்.
Shobha Karandlaje: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னமும் குழந்தையாகவே இருக்கிறார் என மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான சோபா கரந்லஜே கூறினார்.

Published on: December 23, 2025 at 12:05 pm
Updated on: December 23, 2025 at 12:57 pm
புதுடெல்லி, டிச.23, 2025: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள ஹெர்தி பள்ளியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாக நடப்பதில்லை; வாக்குகள் திருடப்படுகின்றன. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல்கள் இதற்கு சமீபத்திய உதாரணம்” எனக் குற்றஞ்சாட்டி இருந்தார்.
#WATCH | Berlin, Germany | Lok Sabha LoP Rahul Gandhi says, "There is a wholesale capture of our institutional framework. Our intelligence agencies, ED and CBI have been weaponised. ED and CBI have zero cases against BJP and most of the political cases are against the people who… pic.twitter.com/ffaoEamAPI
— ANI (@ANI) December 22, 2025
மேலும், அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்கள் அடக்கப்படுகின்றன” எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பதிலளித்த மத்திய அமைச்சம், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான சோபா, “ராகுல் காந்தி இன்னமும் குழந்தையாகவே இருக்கிறார்” என்றார்.
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டின் போது, காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்ற தெலங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் குறித்தும் பேசினார். அப்போது ராகுல், “தெலங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. எனினும் தேர்தல்கள் சரியாக நடைபெறாத இடங்களில் உள்ள பிரச்னைகளை பேசிவருகிறோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் எழுப்பியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க : காங்கிரஸை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. சிவசேனா (உத்தவ்)
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com