Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.
இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
Tamil News Updates January 27 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates January 24 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates January 22 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates January 21 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Updates January 20 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்