Droupadi Murmu: நாட்டில் உள்ள அனைவரும் ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
Droupadi Murmu: நாட்டில் உள்ள அனைவரும் ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.

Published on: January 1, 2026 at 5:44 pm
புதுடெல்லி, ஜன.1, 2026: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நாட்டில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு என்றும் கூறினார். புதுடெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையில், “பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வேகமாக அதிகரித்து வருவதால், அனைவரும் இந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வது அவசியம்” என்றார்.
தொடர்ந்து, “மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏ.ஐ சான்றிதழ்களை வழங்கினார். மேலும், நாட்டின் திறனறிவு சவால் (Skill The Nation Challenge) என்ற தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதையும் படிங்க : 2026 புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி, வெற்றியை கொடுக்கட்டும்.. பிரதமர் நரேந்திர மோடி
இதையடுத்து, “புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, அதைத் தங்கள் தலைமைப் பணிகளில் பயன்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த முயற்சி கோடிக்கணக்கான கற்றலாளர்களை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அவர்களின் திறன்களை மேம்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது. தொடர்ந்து, இது எதிர்காலத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்கும். மேலும், இந்த முயற்சி, இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், திறன் வளர்ச்சியையும் உலகளவில் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொல்கத்தா- கவுஹாத்திக்கு முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com