President Droupadi Murmu Manipur visit 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைத்தார்.
President Droupadi Murmu Manipur visit 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைத்தார்.

Published on: December 12, 2025 at 5:35 pm
புதுடெல்லி, டிச.12, 2025: மணிப்பூர் மாநிலத்தின் செனாபதி மாவட்டத்திற்கு இன்று (டிச.12, 2025) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அங்கு, செயல்படுத்தப்பட்ட ஆறு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்திற்கான ஐந்து அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குடியரசுத் தலைவர் திறந்து வைத்த திட்டங்களில், 25 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாதிரி குடியிருப்பு பள்ளி, 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இரண்டு முதன்மை சுகாதார மையங்கள், 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு பாலங்கள் அடங்கும். திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள், காவல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக மற்றும் பழங்குடியினர், கல்வி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியவை ஆகும்.
செனாபதி மாவட்டத் தலைமையகத்தை அடைந்த பிறகு, குடியரசுத் தலைவர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்திருந்த உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களை சந்தித்து உரையாடினார். மேலும், மணிப்பூரில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை சந்தித்து உரையாடினார்.
இதையும் படிங்க :தெலங்கானாவில் 84.28 சதவீத வாக்குப்பதிவு.. கிராம பஞ்சாயத்து தேர்தலில் குவிந்த வாக்காளர்கள்!
பின்னர், செனாபதி மாவட்டத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பி.எம் ஜன்மான் (PM JANMAN) திட்டத்தின் கீழ் பழங்குடியினர் சமூகத்தை, குறிப்பாக அடிமட்டத்தில் இருக்கும் நபர்களை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது அவர்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் என்று கூறினார். மணிப்பூர் பழங்குடியினரின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் அதிக பங்கேற்பை உறுதி செய்வதும் தேசிய முன்னுரிமைகளாகும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
இதையும் படிங்க : கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங் சௌகான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com