Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published on: September 30, 2025 at 9:51 pm
டெல்லி, செப்.30, 2025: டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இது நடந்த சில நாள்களுக்குப் பிறகு, 62 வயதான சாமியார் அவரது தொலைபேசியில் பல பெண்களுடன் அரட்டையடித்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், போலிச் சாமியார் பெண்களை பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்திழுக்க முயன்றது தெரியவந்தது. அவரது செல்போனில் விமான பணிப்பெண்களுடன் அவர் இருக்கும் பல புகைப்படங்களும், பெண்களின் காட்சி படங்களின் ஸ்கிரீன் ஷாட்களும் இருந்ததாக ஒரு போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
யார் இந்த சாமியார்
பார்த்தசாரதி என இயற்பெயர் கொண்ட இந்தச் சாமியார், மீது மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது முதல் ரூ.122 கோடி மதிப்புள்ள அறக்கட்டளையுடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தை- மகன் கைது.. ஆணவ படுகொலையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com