PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.15, 2026) புதுடெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் 28வது சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.15, 2026) புதுடெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் 28வது சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

Published on: January 15, 2026 at 2:43 pm
புதுடெல்லி, ஜன.15, 2026: புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, காமன்வெல்த் நாடுகளின் 28வது சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு உலகின் பல காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளை ஒருங்கிணைக்கிறது.மேலும் இதில், ஜனநாயக நடைமுறைகள், சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதங்கள் நடைபெறவுள்ளன.
இந்த மாநாட்டின் நோக்கம், நாடுகளுக்கிடையிலான சட்டமன்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். தொடர்ந்து, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் தளமாக செயல்படுதல் ஆகும். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் 28வது சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டை (CSPOC) தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்கிறார்.
இதையும் படிங்க: 2.9 டிகிரி செல்சியஸ் குளிரில் நடுங்கிய டெல்லி.. போக்குவரத்து பாதிப்பு!
இந்த மாநாட்டில் 42 காமன்வெல்த் நாடுகளிலிருந்து 61 சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள், மேலும் 4 தன்னாட்சி நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இதில், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் பங்கு, நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் பயன்பாடு, சமூக ஊடகங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம், பொதுமக்கள் நாடாளுமன்றத்தைப் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்தும் புதிய உத்திகள் மற்றும் வாக்குப்பதிவைத் தாண்டி குடிமக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வழிகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
இந்த மாநாடு, ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு முக்கிய தளமாக அமைகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்- சீன கம்யூனிஸ்ட் குழு சந்திப்பு.. காங்கிரஸ் விமர்சனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com