Austrian President India visit : பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரிய அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Austrian President India visit : பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரிய அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Published on: April 16, 2026 at 1:40 pm
புதுடெல்லி, ஏப். 16 2026: பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரிய அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் இன்று புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்பில், பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட, பரஸ்பர நலன்களைச் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
அதிபர் ஸ்டாக்கர் மற்றும் அவரது மனைவி கெர்டா ஸ்டாக்கர் லெகன்ஸ்டைன், இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர்வளையம் வைத்தனர்.
இது, அதிபர் ஸ்டாக்கரின் இந்தியாவிற்கான முதல் பயணம் மட்டுமல்லாது, ஆசியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வப் பயணமும் ஆகும்.
இருநாட்டு உறவுகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரியா, ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய நட்பு மற்றும் பன்முக உறவுகளை பகிர்ந்து வருகின்றன. 2024 ஜூலையில் பிரதமர் மோடி ஆஸ்திரியாவிற்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணம், இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை கணிசமாக உயர்த்தியது.
அதிபர் ஸ்டாக்கரின் இந்தப் பயணம், பரஸ்பர நலன் சார்ந்த புதிய துறைகளில் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவிற்கான ஆஸ்திரிய குடியரசின் தூதர் டாக்டர் ராபர்ட் ஜிஷ்க் மற்றும் ஆஸ்திரிய குடியரசிற்கான இந்தியத் தூதர் ஷம்பு எஸ். குமாரன் ஆகியோருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரியாவின் கூட்டாட்சி அதிபர் டாக்டர் கிறிஸ்டியன் ஸ்டாக்கரும் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க : வங்கி கடன் மோசடி வழக்கு: ADAG முன்னாள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com