Arundhati Roys book cover controversy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arundhati Roys book cover controversy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 18, 2025 at 9:48 pm
Updated on: September 18, 2025 at 9:49 pm
கொச்சி, செப்.18, 2025: அருந்ததி ராயின் நினைவுக் குறிப்பான ‘மதர் மேரி கம் டு மீ’ புத்தகத்தின் அட்டைப்படத்தில், அவர் புகைபிடிக்கும் காட்சி உள்ளது. இது, புகைபிடிப்பது குறித்த தவறான மற்றும் ஆரோக்கியமற்ற பிம்பத்தை ஊக்குவிப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “இது COTPA விதிமுறைகளை மீறுவதாகவும், புத்தகத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தடை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 18) தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் மற்றும் நீதிபதி பசந்த் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாள ஏதேனும் விதிமுறைகள் அல்லது வழிமுறைகள் உள்ளதா என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. தொடர்ந்து நீதிபதிகள் இந்த மனுவை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கொச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசிம்மன் என்பவர் பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளார். இவர் அளித்த மனுவில், “இந்த அட்டைப் படம் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செய்தியை அனுப்புகிறது என்று அவர் வாதிட்டார்.
இதையும் படிங்க : போதைப் பொருள் கடத்திய ஆசிரியை.. தட்டித் தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com