ஆந்திராவின் துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் பிராயச்சித்த தீக்ஷையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
February 6, 2025
ஆந்திராவின் துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் பிராயச்சித்த தீக்ஷையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Published on: September 22, 2024 at 11:19 am
Updated on: September 22, 2024 at 11:20 am
Pawan Kalyan 11 day Deeksha | ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாகக் கூறப்படும் பாவத்திற்குப் பரிகாரம் கோரி 11 நாள் பிராயச்சித்த தீக்ஷையைத் தொடங்குகிறார். இந்தப் பிராயச்சித்த தீக்ஷையை இன்று (செப். 22, 2024 நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் தொடங்குகிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு வெளியான நிலையில், “சனாதன தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் மன்னிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என பவன் கல்யாண் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது 11 நாள்கள் பிராயச்சித்த தீக்ஷையைத் தொடங்குகிறார் பவன் கல்யாண். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பவன் கல்யாண், “தீக்ஷாவிற்குப் பிறகு நான் திருமலையில் தரிசனம் செய்வேன், ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சியின் போது செய்த பாவங்களைப் போக்க வலிமையைக் கேட்பேன்” என்றார்.
தொடர்ந்து, “பாவங்களை போக்க இது சரியான தருணம்” என்றார். திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இது அரசியலாக்கப்படுகிறது எனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருப்பதி நெய்யில் கலப்படம்; 100 நாள் தோல்வியை மறைக்கும் முயற்சி: ஜெகன்மோகன் ரெட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com