Padma Awards 2027: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை 2026 ஜூலை 31க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Padma Awards 2027: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை 2026 ஜூலை 31க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Published on: April 28, 2026 at 11:52 am
புதுடெல்லி, ஏப்.28, 2026: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஜூலை 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்
பத்ம விருதுகள்: பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி: கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், வணிகம், விளையாட்டு, பொதுநல சேவை போன்ற துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்கள் பரிந்துரைக்கப்படலாம்.
கடைசி நாள்: 2026 ஜூலை 31
இந்த நிலையில், மத்திய அரசு, பொதுமக்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள், துறைகள், மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவை தகுதியான நபர்களை பரிந்துரைக்கலாம் என அறிவித்துள்ளது. பரிந்துரைகள் நேர்மையான விவரங்களுடன் மற்றும் சான்றுகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவறுத்தப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். சமூகத்தில் சிறப்பாக பங்களித்தவர்களை தேசிய அளவில் பாராட்டும் வகையில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாலியல் மாத்திரை அதிகமானதால் இளைஞர் மரணம்.. போலீசார் அதிர்ச்சி தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com