Fog in Delhi | டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 400 விமானங்கள் தாமதமாகின. இரவு 12.30 மணிக்குள் 1.30 மணிக்குள் 19 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டன.
Fog in Delhi | டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 400 விமானங்கள் தாமதமாகின. இரவு 12.30 மணிக்குள் 1.30 மணிக்குள் 19 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டன.
Published on: January 4, 2025 at 10:34 pm
Updated on: January 4, 2025 at 10:46 pm
டெல்லியில் கடும் பனிமூட்டம் | டெல்லி விமான நிலையம் சனிக்கிழமையன்று 19 விமானங்கள் திசைதிருப்பப்பட்டன. கடும் பனி மேக மூட்டம் காரணமாக, 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரி ஒருவர், விமான நிலையத்தில் பார்வைத்திறன் குறைந்ததால் நள்ளிரவு 12.15 மணி முதல் 1.30 மணி வரை 19 விமானங்கள் திருப்பி விடப்பட்டன என்றார்.
அவற்றில் 13 உள்நாட்டு, நான்கு சர்வதேச மற்றும் இரண்டு திட்டமிடப்படாத விமானங்கள் ஆகும். மேலும், டெல்லி மற்றும் இலக்கு விமான நிலையங்களில் மோசமான வானிலை காரணமாக 45 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்ரேடார்24. காம் தகவலின் படி, டெல்லி விமான நிலையத்தில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்துள்ளன எனத் தெரியவருகிறது.
மேலும், நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அதிகாலையில் விமான நிலையத்திற்கு வருவதையும் புறப்படுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில், தேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகிறோம் என்று டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில், அடர்ந்த மூடுபனி காரணமாக மோசமான தெரிவுநிலையானது விமானச் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com