ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: கனிமொழி பங்கேற்பு!

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார்.

Published on: October 16, 2024 at 4:40 pm

Jammu and Kashmir | சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களை வென்றுள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை பெற்றுள்ளன. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு வழங்கியதால், அக்கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.

முதலமைச்சராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க துணை நிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும்,ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 அமைச்சர்கள் பதிவியேற்றுக் கொண்டனர்.

ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி, என்சிபி சார்பில் சுப்ரியா சூலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
lawrence bishnois gang claims responsibility for baba siddiques murder

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com