Nandita Garlosa: அஸ்ஸாம் வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு முன்னதாக, காங்கிரஸில் சேர்ந்த பாஜக பிரமுகர் நந்திதா கோர்லோசா யார் தெரியுமா?
Nandita Garlosa: அஸ்ஸாம் வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு முன்னதாக, காங்கிரஸில் சேர்ந்த பாஜக பிரமுகர் நந்திதா கோர்லோசா யார் தெரியுமா?

Published on: March 23, 2026 at 11:30 am
கௌஹாத்தி, மார்ச் 23, 2026: நந்திதா கோர்லோசாவின் திடீர் கட்சித் தாவல், அஸ்ஸாம் மாநிலத் தேர்தலுக்கான காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், அவர் ஹாஃப்லாங் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநில அரசியல்வாதி நந்திதா கோர்லோசா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கடைசி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு மாறியதால் கவனத்தின் மையமாகியுள்ளார்.
ஹாஃப்லாங் பழங்குடி தனி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மாநில அமைச்சரான அவர், பாஜக அடுத்த தேர்தலுக்கான சீட்டினை மறுத்ததால் இந்த முடிவை எடுத்தார். அந்த இடத்தில் பாஜக, புதிய வேட்பாளரான ருபாலி லாங்தாசாவை நிறுத்தியுள்ளது.
யார் நந்திதா கோர்லோசா?
நந்திதா கோர்லோசா அஸ்ஸாம் மாநில அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவர் மாநில சட்டமன்றத்தில் ஹாஃப்லாங் (பழங்குடி) தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.
2021-இல் பாஜக சீட்டில் ஹாஃப்லாங் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் அஸ்ஸாம் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் பழங்குடி நம்பிக்கை மற்றும் கலாசாரம் போன்ற துறைகளை கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com