Zubeen Garg Death : அஸ்ஸாம் பாடகர் மரணம் அடைந்த வழக்கில், அவரின் மேலாளர், சிங்கப்பூர் ஈவென்ட் அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
Zubeen Garg Death : அஸ்ஸாம் பாடகர் மரணம் அடைந்த வழக்கில், அவரின் மேலாளர், சிங்கப்பூர் ஈவென்ட் அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
Published on: October 1, 2025 at 12:27 pm
அஸ்ஸாம், அக் 1, 2025: அஸ்ஸாம் பாடகர் ஜூபீன் கார்க்கின் மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) இரவு, அஸ்ஸாம் சிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வடகிழக்கு இந்திய விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் பாடகரின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரை கைது செய்தது.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் காவலில் வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதில், ஷ்யாம்கானு மஹந்தா புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.பின்னர் குவஹாத்திக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு குழு வந்தது. குருகிராமில் இரவு தங்கிய பின்னர் ராஜஸ்தானைச் சேர்ந்த சித்தார்த் சர்மாவை மற்றொரு சிறப்பு விசாரணைக் குழு கைது செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
.அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க்கின் மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க :விமானப் பணிப்பெண்களுடன் செல்பி.. மாணவிகளுக்கு தொல்லை.. யார் இந்த டெல்லி சாமியார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com