Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் மனைவியின் ஜடையை துண்டித்துள்ளார். அவரது தந்தை வரதட்சணை கொடுமையால் புகார் அளித்துள்ளார்.
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் மனைவியின் ஜடையை துண்டித்துள்ளார். அவரது தந்தை வரதட்சணை கொடுமையால் புகார் அளித்துள்ளார்.
Published on: April 20, 2025 at 3:58 pm
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் அழகு நிலையத்தில் தனது மனைவியின் ஜடையை அறுத்ததாகக், பெண்ணின் கணவர் இன்று (ஏப்.20 2025) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகள் ராம் பிரதாப்பை திருமணம் செய்துகொண்ட நாள் முதல், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வரதட்சணையாக குளிர்சாதன பெட்டி கேட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ரவி பிரகாஷ், “பெண்ணின் கணவர் மூன்று நபர்களுடன் வந்து பிரச்னை செய்துள்ளார். பெண்ணின் ஜடையையும் பிடித்து அறுத்துள்ளார். இதனால் நிலைமை மோசமானது” என்றார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் வரதட்சணை கொடுமையுடன் தொடர்புடையது என்று பெண்ணின் தந்தை ராதாகிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால், ராம்பிரதாப் தனது மனைவி புருவங்களை சரிசெய்ய அழகு நிலையத்திற்கு வந்ததால் கோபமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவால் மகளுடன் திருமணம்: யார் இந்த சம்பவ் ஜெயின்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com