Kerala | Sexual Abuse | இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியதால், நடிகர் எடவேல பாபு விடுவிக்கப்பட்டார்.
February 6, 2025
Kerala | Sexual Abuse | இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியதால், நடிகர் எடவேல பாபு விடுவிக்கப்பட்டார்.
Published on: September 25, 2024 at 3:26 pm
Kerala | Sexual Abuse | நடிகரும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முன்னாள் பொதுச் செயலாளருமான எடவேல பாபு, பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியதால், நடிகர் எடவேல பாபு விடுவிக்கப்பட்டார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்பு கைது செய்யப்படும் இரண்டாவது நடிகர் இவர் ஆவார்.
முன்னதாக எடவேல பாபு, கொச்சியில் உள்ள கடலோர காவல்துறை தலைமையகத்தில் கடலோர ஏஐஜி ஜி. பூங்குழல் தலைமையிலான அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பாபு ஏற்கனவே கொச்சியில் உள்ள நீதிமன்றத்தால் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்ததால், அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரை மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினருமான எம். முகேஷை கைது செய்து விடுவித்ததைப் போல் சிறப்பு போலீசார் அதே நடைமுறையை பின்பற்றினர். நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அம்மா சங்கத்தில் பொறுப்பில் இருந்த பாபு, தனது வீட்டில் வைத்து நடிகையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்தத் தகவல்கள் நடிகை அளித்த பாலியல் புகாரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்திய இளைஞர்: கைதானது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com