Manikrao Kokate play rummy in Assembly: மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்றத்தில் ரம்மி விளையாடியது தெரியவந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
Manikrao Kokate play rummy in Assembly: மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்றத்தில் ரம்மி விளையாடியது தெரியவந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
Published on: July 20, 2025 at 2:06 pm
மும்பை, ஜூலை 20 2025: மகாராஷ்டிரா மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20 2025) சட்டமன்றத்தில் தனது தொலைபேசியில் ஆன்லைனில், ஜங்கிலி ரம்மி விளையாடுவது போன்ற வீடியோவை தேசியவாத காங்கிரஸ் கட்சி (SP) தலைவர் ரோஹித் பவார் பகிர்ந்துள்ளார்.
இவர் இந்தக் காட்சியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து அமைச்சர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சரத் பவார் கட்சி பிரமுகர் பகிர்ந்த வீடியோவில், “பாரதிய ஜனதா கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் (அஜித் பவார் தலைமையிலான என்சிபி) எதுவும் செய்ய முடியாது.
“#जंगली_रमी_पे_आओ_ना_महाराज…!”
— Rohit Pawar (@RRPSpeaks) July 20, 2025
सत्तेतल्या राष्ट्रवादी गटाला भाजपला विचारल्याशिवाय काहीच करता येत नाही म्हणूनच शेतीचे असंख्य प्रश्न प्रलंबित असताना, राज्यात रोज ८ शेतकरी आत्महत्या करत असताना सुद्धा काही कामच नसल्याने कृषिमंत्र्यांवर रमी खेळण्याची वेळ येत असावी.
रस्ता भरकटलेल्या… pic.twitter.com/52jz7eTAtq
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை ஏராளமான விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் இருக்கின்றன; மகாராஷ்டிராவில் ஒவ்வொரு நாளும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில், விவசாய அமைச்சருக்கு எந்த வேலையும் இல்லை. ரம்மி விளையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைலில் மதமாற்றம்.. 6 மாநிலத்தில் 10 பேர் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com