Kerala Rain alerts: கேரளத்தில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
Kerala Rain alerts: கேரளத்தில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
Published on: May 20, 2025 at 7:41 pm
புதுடெல்லி, மே 20 2025: தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழை காரணமாக கர்நாடகாவில் 5 உயிரிழப்புகளும், தமிழ்நாட்டில் 3 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், கேரளம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெங்களூருவில் கனமழை
கர்நாடக தலைநகரில் பெய்த கனமழையால் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்கள் முழங்கால் அளவு தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து சென்றனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூருவின் சில்க் சாலை சந்திப்பு, ஓசூர் சாலை, பிடிஎம் லேஅவுட் உள்ளிட்ட முக்கிய நகரச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
முன்னதாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், நகரில் 210 வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், பெரும்பாலான பகுதிகளைச் சரிசெய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் முன்னேற்றம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கேரளத்திற்கு ரெட் அலர்ட்
காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட நான்கு வடக்கு கேரள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாலக்காடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (KSDMA) கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் 204.4 மி.மீ.,க்கு மேல் மழை பெய்யும் (அதாவது மிகவும் கனமழை) என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ், மிகவும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெண் ராணுவ அதிகாரிகள் குறித்து அவதூறு: பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு நீதிமன்ற காவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com