Siddaramaiahs election victory: கர்நாடக மாநிலம் வருணா சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Siddaramaiahs election victory: கர்நாடக மாநிலம் வருணா சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Published on: April 24, 2025 at 2:37 pm
பெங்களூரு, ஏப்.24 2025: கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.
அதாவது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள ‘ஐந்து உத்தரவாதங்கள்’ வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஊழல் நிறைந்தவை என்று குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இது தொடர்பான மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. அப்போது, “உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டத்தின்படி, தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவாதங்கள் ஆர்பி சட்டத்தின் பிரிவு 123 இன் கீழ் ஊழல் நிறைந்த நடைமுறையாகக் கருத முடியாது” என்று நீதிபதி சுனில் தத் யாதவ் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.22 2025) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை மைசூரு மாவட்டம் கூடனஹள்ளியைச் சேர்ந்த கே. சங்கரா என்பவர் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், சித்தராமையா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதை சவால் செய்து இருந்தார்.
அதில், “முக்கியமாக ஐந்து உத்தரவாதங்களும் மக்கள் பிரதிநிதித்துவ (ஆர்.பி.) சட்டத்தின் பிரிவு 123(2) இன் படி லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்குக்கு சமமான ஊழல் நடைமுறைகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் உள்ளூர் உளவுத்துறையின் தோல்வி: ப.சிதம்பரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com