Kerala | Kannur | சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) தலைவரும் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான PP திவ்யா ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு பற்றி விமர்சித்த ஒரு நாள் கழித்து, அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பாபுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக அவர் புதிய பொறுப்பை ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்துள்ளது.
மார்க்சிஸ்ட் திவ்யா பேச்சு
முன்னதாக, கண்ணூரில் திங்கள்கிழமை நடந்த பாபுவின் பிரியாவிடை நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டன் அவரை கவுரவித்தார். இந்த விழாவில் திவ்யா கலந்துகொண்டு, பாபுவின் பதவிக்காலம் குறித்த தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
அப்போது திவ்யா, “வேறு மாவட்டத்திற்குச் செல்லும் கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, “தொழில்முனைவோர் (எரிபொருள் விற்பனை நிலைய விண்ணப்பதாரர்) பலமுறை என்னிடம் வந்து பிரச்னைகளை கூறுவார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் தடை இல்லா சான்றிதழ் வழங்கவில்லை. ஜிக்ஜாக் சாலையில் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்” என்றார்.
காங்கிரஸ் வலியுறுத்தல்
கண்ணூரில் உள்ள சி.பி.எம். திவ்யா சிபிஐ(எம்) மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபுவின் மனைவி மஞ்சுஷா, பத்தனம்திட்டா மாவட்டம், கொன்னியில் தாசில்தாராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Kerala: கேரள மாநிலம் கோட்டயம், திருவாதுக்கல்லில் தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….
Vizhinjam port: பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தை 2025 மே2ஆம் தேதி தொடங்கிவைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துறைமுகம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது….
Death During Home Birth: கேரளாவில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பிரபல யூடியூபரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
L2Emburaan Boxoffice Collection: மலையாள பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த எல்2 எம்புரான். 9ம் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?…
ED summoned Gokulam Gopalan: ‘எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கான காரணம் இதோ!…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்