Udhampur Encounter: பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு உதம்பூர் மோதலில் இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
Udhampur Encounter: பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு உதம்பூர் மோதலில் இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
Published on: April 24, 2025 at 3:34 pm
ஸ்ரீநகர், ஏப்.24 2025: ஜம்மு காஷ்மீர் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாள்களுக்குப் பிறகு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற ராணுவ வீரர் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்துள்ளார் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் உள்ளது. இந்த இடத்தில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு 2025 ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இவர்களில், 25 பேர் இந்தியர்கள் ஆவார்கள். மேலும், ஒருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலர் காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பூஞ்ச் மெந்தரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த போது, இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் பெரும் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவ பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்க பயங்கரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் புதன்கிழமை (ஏப்.23 2025) முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சத்தீஸ்கர்- தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பலி.. பாதுகாப்பு படை அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com