Sexual abuse | ஜம்மு காஷ்மீரில் விமானப் படையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Sexual abuse | ஜம்மு காஷ்மீரில் விமானப் படையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Published on: September 10, 2024 at 11:42 pm
Sexual abuse | இந்திய விமானப் படையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், விங் கமாண்டர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்காம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரிகளும் ஸ்ரீநகரில் உள்ளனர்.
புகாரில், ‘கடந்த இரண்டு வருடங்களாக தாம் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் மனரீதியான சித்திரவதைகளை அனுபவித்ததாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி” கூறியுள்ளார்.
மேலும், “ஒருமுறை தன்னுடைய குடும்பத்தினர் இங்குள்ளனர் என ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்தார்” என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இந்த செக்ஸ் தொல்லை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடக்கிறது என பெண் அதிகாரி தனது புகாரில் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். ஆனால் அந்தப் புகாரின் மீது அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஹேமா கமிட்டி அறிக்கை; குற்றவாளிகள் பெரும்பாலும் மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com