Haryana Congress Himani Narwal: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி உடல் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Haryana Congress Himani Narwal: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி உடல் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: March 2, 2025 at 11:19 am
சண்டிகர் (ஹரியானா) மார்ச் 2, 2025: ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை (மார்ச் 2, 2025) ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இவர், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கெடுத்த ஹிமானி நர்வால் (22) ஆவார். இவரின், மரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஹரியானாவில், மாநிலம் முழுவதும் 33 நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் இளம் நிர்வாகி உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூட்கேஸ் சம்ப்லா பேருந்து நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.
மேலும், சம்பவ இடத்துக்கு தடயவியல் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். இந்த வழக்கு பற்றி போலீசார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் துப்பட்டா சுற்றியிருந்தது என்றனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ரோஹ்தக்கின் பிஜிஐஎம்.எஸ் (PGIMS) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சி ஊழியரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற விசாரணையை கோரியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 12, 2025ல் வெளியாகின்றன.
இதையும் படிங்க : டெல்லியில் பரபரப்பு.. தமிழக அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com