Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
IndiGo: 95 சதவீத சேவை மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது; இன்று 1500 விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது….
Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்….
Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்….
New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
Narendra Modi : ‘உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை முக்கியமானது’ என்று ஸ்டார்மருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்