Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்….
Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது….
MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர்…
Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன….
Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்