இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்த தாசுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்த தாசுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on: February 22, 2025 at 7:54 pm
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக பொறுப்பில் இருந்தவர் சக்தி காந்ததாஸ். இவருக்கு தற்போது புதிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி கே மிஸ்ரா 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்ததாசுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் இரண்டாவது முதன்மைச் செயலாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி காந்ததாஸ் 2024 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொறுப்பின் காலம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சக்தி காந்ததாஸ் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி பிறந்தார். இவர் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாறில் முதன்மை பட்டம் பெற்றவராவார்.
1980 ஆம் ஆண்டு இவர் தமிழக அளவில் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நாட்டின் 25 ஆவது ஆர்பிஐ கவர்னராக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
பொருளாதார சவால் மிகுந்த அந்த காலத்தில் நியமிக்கப்பட்ட சக்தி காந்த தாஸ் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இவரின் பணிகள் பரவலாக பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இதுதான் வாழ்க்கையா? இது பிரச்னை.. டூர் சென்ற இஸ்லாமிய விதவை பெண்ணுக்கு மதகுரு எதிர்ப்பு
தேசிய கல்விக் கொள்கை.. அரசியல் பார்வை கூடாது.. மு.க ஸ்டாலினுக்கு பிரதான் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com