Fire breaks out at a theater in Delhi: டெல்லி சாகேத் பகுதியில் உள்ள தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
Fire breaks out at a theater in Delhi: டெல்லி சாகேத் பகுதியில் உள்ள தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on: February 27, 2025 at 12:10 am
புதுடெல்லி, பிப்.26: டெல்லி சாகேத் பகுதியில் பி.வி.ஆர். மால் உள்ளது. இங்குள்ள ஒரு தியேட்டரில் நேற்று(பிப். 26) மாலை 4.15 மணிக்கு விக்கி கவுசல் நடித்த “சாவா” படம் திரையிடப்பட்டது. படத்தை அனைவரும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென திரையின் ஒரு மூலையில் தீப்பற்றியது. இது முதலில் யாருக்கும் தெரியவில்லை. படத்தில் ஒரு காட்சி என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் புகை வெளிவர தொடங்கியதும் அதை சுவாசித்த பலரும் உண்மையான தீ விபத்து என்பதை உணர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து தியேட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அலாரம் மணியை ஒலிக்க செய்தனர். உண்மையாக தீப்பற்றியதை அறிந்த ரசிகர்கள் பயத்தில் அலறியடித்து திரையரங்கை விட்டு வெளியே ஓடினார்கள்.
இதற்கிடையே தீ விபத்து பற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 6 வண்டிகளில் விரைந்து சென்றனர். சுமார் 1/4 மணி நேரத்தில் தீயை அணைத்து முடித்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும், எந்த காயமும் ஏற்படவில்லை. வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க 1984 சீக்கிய கலவரம்.. காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com