Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Tamil News Highlights June 19 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates June 14 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates June 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates June 12 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates June 06 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்