Delhi riots case: டெல்லி கலவர வழக்கில் துப்பாக்கியை நீட்டிய ஷாருக் பதான் என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் 15 நாள்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Delhi riots case: டெல்லி கலவர வழக்கில் துப்பாக்கியை நீட்டிய ஷாருக் பதான் என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் 15 நாள்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Published on: March 7, 2025 at 11:54 pm
புதுடெல்லி, மார்ச் 7, 2025: வடகிழக்கு டெல்லி கலவரத்தின் (2020) போது போலீஸ் கான்ஸ்டபிளை நோக்கி துப்பாக்கியை நீட்டிய ஷாருக் பதான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு டெல்லி கர்கர்டூமா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 7, 2025) மனிதாபிமான அடிப்படையில் 15 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
ஷாருக் பதானின் தந்தையின் உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
மேலும், இது இடைக்கால ஜாமீன் ஆகும். இதில் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதத் தொகை அளிக்கப்பட்டுள்ளன.
பதான் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையைக் கவனித்துக் கொள்ள இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதானின் ஜாமினில் அவர் ரூ.20,000 தனிப்பட்ட பத்திரம் மற்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டெல்லி காவல்துறை ஷாருக் பதானின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும், ஜாமினை ஷாருக் பதான் துஷ்பிரயோகம் செய்யலாம் எனவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஷாருக் பதான் ஜாமின் மனு
ஷாருக் பதான் தனது ஜாமின் மனுவில், தனது தந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் ஆர்.கே. நரேந்திர பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : நான் கஞ்சா புகைப்பேன்.. சர்ச்சையில் சிக்கிய ஐஐடி பாபா.. வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com