Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.
Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.
Published on: June 5, 2025 at 10:43 pm
புதுடெல்லி, ஜூன் 5 2025: இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4,866 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி) ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் உயிரிழப்பு 3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 4 2025) கேரளாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் முறையே 112, 106 மற்றும் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நாடு தழுவிய கோவிட் மாதிரிப் பயிற்சியை நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மேலும் அதிகாரிகள் ஆக்ஸிஜன் வழங்கல், அத்தியாவசிய மருந்துகளின் நிலை மற்றும் நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் கிடைப்பதை மதிப்பிடுவது குறித்தும் ஆய்வுகள் நடத்துவார்கள்.
இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com