Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர்.
Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர்.
Published on: February 9, 2025 at 10:44 am
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பிப்.8ஆம் தேதி வெளியாகின. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 67ல் டெபாசிட் பெறவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடத்தையும் வெல்லவில்லை. இது, காங்கிரஸுக்கு ஹாட்ரிக் தேர்தல் தோல்வியாகும். 70 இடங்களிலும் போட்டியிட்ட போதிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர்.
அடுத்த முதலமைச்சர் யார்?
பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், தொழிலாளர்களின் நலன்களை மனதில் கொண்டு கட்சியின் மத்திய தலைவர்கள் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வார்கள்” என்றார்.
டெல்லியை பொருத்தவரை, பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, துஷ்யந்த் கவுதம் உள்ளிட்ட பல பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன. இருப்பினும், எதிர்பாராத தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாஜகவுக்கு வரலாறு உண்டு என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்கண்ட் செல்லும் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com