CEC Gyanesh Kumar Impeachment Motion: ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நிராகரித்தார்.
CEC Gyanesh Kumar Impeachment Motion: ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நிராகரித்தார்.

Published on: April 7, 2026 at 10:18 am
புதுடெல்லி, ஏப்.7, 2026: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த தீர்மான அறிவிப்பை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான தனித்தனி அறிக்கைகளில், தீர்மான அறிவிப்பை கவனமாகவும், பொருத்தமான அனைத்து அம்சங்களையும், தொடர்புடைய பிரச்சினைகளையும் ஆராய்ந்து, மதிப்பீடு செய்த பின், ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் தீர்மான அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒருதலைபட்சமான போக்கைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரக் கோரி, எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் முதல் முறையாக அறிவிப்புகளைச் சமர்ப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி சட்டசபையில் பாதுகாப்பு மீறல்.. 3 பேர் கைது.. முகமூடி அணிந்த நபர் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com