BJP MP Sambit Patra: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான கருத்துக்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, ஹபீஸ் சயீத் விரும்புவார் என பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.
BJP MP Sambit Patra: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான கருத்துக்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, ஹபீஸ் சயீத் விரும்புவார் என பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.
Published on: May 20, 2025 at 8:18 pm
புதுடெல்லி, மே 20 2025: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது போல் உள்ளன என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி சம்பித் பத்ரா தெரிவித்தார்.
இது குறித்து இன்று (மே 20 2025) பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் குட்டி போட் கருத்து மற்றும் எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்ற ராகுல் காந்தியின் கருத்து பாகிஸ்தானுக்கு ஆக்ஸிஜன் அளிப்பது போல் உள்ளது” என்றார்.
மேலும், “ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக ஆதாரம் கேட்டு வருகிறார். முதல் நாளிலிருந்தே நாங்கள் டிஜிட்டல் ஆதாரங்களை வழங்கி வருகிறோம். பாகிஸ்தானியர்களே ஆதாரங்களைக் காட்டியுள்ளனர். ஆனாலும் ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரம் கேட்கிறார்” என்றார்.
ராகுல் காந்தி என்ன பேசினார்?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பாகிஸ்தான் போரில் எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன் எனவும் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கிடையில் சம்பித் பத்ரா எம்.பி, தனது பேச்சின் போது ராகுல் காந்தியை பாகிஸ்தானின் போஸ்டர் பாய் எனவும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பெண் ராணுவ அதிகாரிகள் குறித்து அவதூறு: பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு நீதிமன்ற காவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com