BJP question to Congress: ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, காங்கிரஸ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க கேள்வியெழுப்பியுள்ளது.
BJP question to Congress: ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, காங்கிரஸ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க கேள்வியெழுப்பியுள்ளது.
Published on: September 29, 2025 at 3:46 pm
புதுடெல்லி, செப்.29, 2025: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
It seems India’s stunning win against Pakistan in the Asia Cup final has left Rahul Gandhi and the entire Congress in a comatose state. Just like after #OperationSindoor, when they couldn’t bring themselves to congratulate the Indian Army for its stupendous strikes, they now…
— Amit Malviya (@amitmalviya) September 29, 2025
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸில், “ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தின் அற்புதமான தாக்குதல்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அவர்களுக்கு (காங்கிரஸ்) மனம் வரவில்லை. இந்நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் அற்புதமான வெற்றி ராகுல் காந்தியையும் ஒட்டுமொத்த காங்கிரசையும் மயக்க நிலையில் ஆழ்த்தியுள்ளது போல் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :மேற்கு வங்கம்; ரயில் மோதி குழந்தை, பெண் உள்பட மூவர் உயிரிழப்பு!
காத்திருக்கிறார்களா?
மேலும், “அவர்கள் (காங்கிரஸ்) இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடுவதில் நாட்டோடு இணைவதற்கு முன்பு மொஹ்சின் நக்வி மற்றும் பாகிஸ்தானில் உள்ள அவர்களது மற்ற நிர்வாகிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது” எனவும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிர்ப்பு
முன்னதாக, ஆசிய கோப்பை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கைகளால் கோப்பை மற்றும் பதக்கம் வாங்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பட்டியல் சாதியினர் குறி.. குழு குழுவாக பிரிந்து மதமாற்றம்.. முக்கிய நபரை தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com