மாநிலங்களவை தேர்தல்.. பாஜக தலைவர் நிதின் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Rajya Sabha election: நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தலில் பாஜக, ஒன்பது இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது; பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Published on: March 5, 2026 at 3:59 pm

புதுடெல்லி, மார்ச் 05 2026: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தம் 9 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில், பீகாரில் இருந்து கட்சியின் வேட்பாளராக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விரிவான வேட்பாளர் பட்டியல்

பீகார்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பீகார் பாஜகவின் பொதுச் செயலாளர் சிவேஷ் குமார்

அசாம் : அசாம் பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோகன் மோகன் மற்றும் எம்எல்ஏ தேராஷ் கோவல்லா

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் பிரிவு துணைத் தலைவர் லட்சுமி

ஹரியானா: பாஜக முன்னாள் மக்களவை எம்.பி சஞ்சய் பாட்டியா

ஒடிசா: ஒடிசா பிரிவுத் தலைவர் மன்மோஹம் சமல் மற்றும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யான சுஜித் குமார்

மேற்கு வங்கம்: மேற்கு வங்க பிரிவு முன்னாள் தலைவர் ராகுல் சின்ஹா ​​

பீகாரைச் சேர்ந்த நிதின் நபின், கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராஜ்யசபாவில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 37 ராஜ்யசபா சீட்டுகளுக்கு மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கு மனுத்தாக்கல் செய்ய இன்று (மார்ச் 5 ) கடைசி நாளாகும்.

பீகாரில் 5 ராஜ்யசபா எம்பி-க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது, இதில் JDU, RJD, RLSP உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

இதையும் படிங்க: ஐக்கிய ஜனதா தளத்தின் இளம் தலைவர்.. யார் இந்த நிஷாந்த் குமார்.. பரபரக்கும் பீகார்.!

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. முழு விவரம்!
India - Canada Agreements

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com