PM Modis address to nation: ஜி.எஸ்.டி சேமிப்பு, சிறு குறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி செய்தி. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள் இங்குள்ளன.
PM Modis address to nation: ஜி.எஸ்.டி சேமிப்பு, சிறு குறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி செய்தி. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள் இங்குள்ளன.
Published on: September 21, 2025 at 10:39 pm
Updated on: September 21, 2025 at 10:58 pm
புதுடெல்லி, செப்.21, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.21, 2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அறிவித்தார்.
அப்போது, இந்த ஜி.எஸ்.டி திருத்தங்கள் நாளை, (செப்டம்பர் 22 ஆம் தேதி) முதல் நவராத்திரியின் முதல் நாளோடு இணைந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.
ஜிஎஸ்டி 2.0 குறித்த பிரதமர் மோடியின் உரையின் சுருக்கங்கள்
பண்டிகை வாழ்த்துக்கள் மற்றும் சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி குடிமக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்து, செப்டம்பர் 22 முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அப்போது, இது ஆத்மநிர்பர் பாரத்தை நோக்கிய ஒரு படியாகும் என்று கூறினார்.
சீர்திருத்தங்களை ஒரு சேமிப்புத் திருவிழா என வர்ணித்த பிரதமர் நரேந்திர மோடி, இப்போது குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும் என்றார்.
ஜி.எஸ்.டி மலிவு
தற்போது, 12 சதவீத வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருட்கள் இப்போது 5 சதவீத வரிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், அன்றாட அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பாலானவை மலிவாக மாறும். மேலும், ஹோட்டல்கள் மற்றும் பயணங்களும் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அறிவிப்பில் ரூ.12 லட்சம் வருமானம் இப்போது வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், இது நடுத்தர மற்றும் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கிறது என்று மோடி கூறினார்.
தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு, புதிய அபிலாஷைகள் மற்றும் கனவுகளுடன் இந்தியாவின் நவ-நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
இதையடுத்து, ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் காரணமாக இந்த ஆண்டு குடிமக்கள் ரூ.2.5 லட்சம் கோடியை மிச்சப்படுத்துவார்கள் என்று பிரதமர் கூறினார்.
சுதேசி மந்திரம்
இதற்கிடையில்,சுதேசி மதிப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார், இந்தியர்கள் அன்றாட வாழ்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே விரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க : இந்தியாவின் மிகப்பெரிய எதிரி.. வெளிப்படையாக பேசிய பிரதமர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com