டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்த இருக்கையில் அமர மறுத்துவிட்டார்.

February 17, 2025
டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்த இருக்கையில் அமர மறுத்துவிட்டார்.
Published on: September 23, 2024 at 8:00 pm
Atishi takes charge as Delhi CM | டெல்லியின் 9வது முதல் அமைச்சர் மற்றும் 3வது பெண் முதலமைச்சரான அதிஷி இன்று தலைமை செயலகத்தில் பொறுப்புகளை கவனித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்த இருக்கையில் அமர மறுத்துவிட்டார். இதுகுறித்து பேசிய அதிஷி, “ராமரின் வனவாச நிகழ்வு போன்று இது எனக்கு மனதில் உறுத்தலாக உள்ளது. மிகுந்த வலியை உணர்கிறேன்.
ராமர் வழியில் கண்ணியம், ஒழுக்கத்துடன் இந்தச் சவாலை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுள்ளார். ராமரின் வனவாசத்தால் 14 ஆண்டுகள் அவரது பாதணியை வைத்து பரதன் நாட்டை ஆண்டதுபோல கெஜ்ரிவாலின் இந்த சிம்மாசனத்தை வைத்து வருகிற 4 மாதங்களுக்கு அரசை நடத்துவேன்.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆசீர்வாதம்: டெல்லியின் 3வது பெண் முதலமைச்சரானார் அதிஷி!
டெல்லி மக்கள் வருகிற தேர்தலில் அவரை மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்வார்கள். அதுவரை அவரது நாற்காலி முதல்-மந்திரி அறையிலேயே இருக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழை கெடுக்க கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜனதா செய்யாத வேலைகளே இல்லை” என்றார்.
“நாடகம்” என பா.ஜ.க விமர்சனம்
அதிஷியின் இந்தச் செயலை பா.ஜனதா நாடகம் என விமர்சித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “டெல்லியில் இந்த நாடகம் நிறுத்தப்பட வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலை தலைமை செயலகத்துக்கு அனுமதிக்காமல் நீதிமன்றம் தடுத்துள்ளது. அதிஷி டெல்லியின் அடுத்த மன்மோகன் சிங்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com