Construction Building collapsed in Delhis Paharganj: டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Construction Building collapsed in Delhis Paharganj: டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: May 17, 2025 at 9:29 pm
புதுடெல்லி, மே 17 2025: டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் சனிக்கிழமை (மே 17 2025) கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பஹர்கஞ்சில் உள்ள கிருஷ்ணா ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஆரா கன்சா சாலையில், கட்டுமானத்தில் இருந்த ஒரு அடித்தளத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன எனவும் அவர்கள் கூறினார்கள். இந்த இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் முதல்கட்டமாக விரைந்து மீட்கப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் உயிரிழந்தனர்.
வழக்குப்பதிவு
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : வீடியோ பகிர்ந்த ராகுல் காந்தி.. உண்மை சரிபார்ப்பு தகவல் என்ன!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com