Madhya Pradesh Road Accident: மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Madhya Pradesh Road Accident: மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Published on: March 10, 2025 at 2:05 pm
மத்திய பிரதேச மாநிலத்தின் சிதி-பக்ரீத் சாலையில் உள்ள உக்னி பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு எஸ்யூவி டாக்ஸி சேவை வாகனம் மை ஹார்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது சிதியில் இருந்து பக்ரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வாகனத்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த 14 பேரில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக சிதி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் சிதி மாவட்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி திவாரி தெரிவித்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் எஸ்யூவி வாகனம் தவறான திசையில் இருந்து நெருங்கி வந்ததால் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை விதத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவியும் வழங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க கோவாவில் ரூ.11.67 கோடி ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com