Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Published on: August 26, 2025 at 10:22 pm
ஜம்மு, ஆக.26 2025: ஜம்மு காஷ்மீர் மாநிலம் திரிகுடா மலைகளின் உச்சியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி சன்னதிக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தனர். மேலும், இதில் 12க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். சம்பவ பகுதியில் மழைப் பொழிவு தொடர்கிறது.
ரெட் அலர்ட்
இதற்கிடையில், அனந்த்நாக், கிஷ்த்வார், தோடா, கதுவா, ரம்பன், உதம்பூர், ரியாசி, ரஜோரி, ஜம்மு மற்றும் சப்மா உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டு உள்ளது.
மீட்புப் பணியில் ராணுவம்
இந்த நிலையில், மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் மலை உச்சியில் பாதியிலேயே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அத்க்வாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், மழைப் பொழிவு, நிலச்சரிவில் இருந்து உயிர்களைக் காப்பாற்றவும், தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்கவும், பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com