சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
Published on: November 22, 2024 at 3:36 pm
Chhattisgarh naxalites Encounter | சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) பாதுகாப்புப் படையினர் நடத்தி்ய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் பி கூறுகையில், பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப்படையினருக்கு நக்சலைட் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
கொரஜ்குடா, டான்டேஸ்புரம், நகரம் மற்றும் பந்தர்பதார் கிராமங்களின் வன மலைகளில் நக்சலைட்களின் கோண்டா மற்றும் கிஸ்டாரம் பகுதி கமிட்டிகளைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த துப்பாக்கிசூடு நிகழ்ந்தது. அந்த இடத்தில் இருந்து இதுவரை 10 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் செல்ஃப்-லோடிங் ரைபிள் (எஸ்எல்ஆர்) உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) நடத்திய தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க அஸ்ஸாம், ‘கரீம்கஞ்ச்’, ‘ஸ்ரீ பூமி’ என மாற்றம்: புதிய பெயர் வரலாறு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com