Woman who lost 70 kg: பெண் ஒருவர் 70 கிலோ வரை எடை குறைத்து அசத்தியுள்ளார். மேலும், இது குறித்து இவர் சில டிப்ஸ்களையும் வழங்குகிறார்.
Woman who lost 70 kg: பெண் ஒருவர் 70 கிலோ வரை எடை குறைத்து அசத்தியுள்ளார். மேலும், இது குறித்து இவர் சில டிப்ஸ்களையும் வழங்குகிறார்.
Published on: October 6, 2025 at 1:35 pm
சென்னை, அக்.6, 2025: ஆணோ, பெண்ணோ உடல் எடை அதிகரிப்பு பிரச்னை பொதுவானதாக அறியப்படுகிறது. அதிக உடல் எடை போட்ட பின்பு, அதனை குறைக்க பலரும் போராடுகின்றனர். இந்நிலையில், கேட் டேனியல் என்ற பெண்,எளிமையான, நிலையான பழக்கவழக்கங்கள் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
அதில், “நான் உருவாக்கிய சிறிய, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பழக்கங்கள்தான் 70 கிலோவுக்கு மேல் எடையைக் குறைக்க உதவியது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இதில் சிக்கலான விஷயங்கள் எதுவும் இல்லை. ஒரு நாளைக்கு நமது மூளையை அடுக்கி வைத்து மீண்டும் இயக்கும் எளிய விஷயங்கள் மட்டுமே” உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
உணவு கட்ப்பாடு
சத்தான உணவுகளை தேவைக்கு எடுத்துக்கொண்டேன்; தேவையில்லாத உணவுகளை தவிர்த்தேன். இது சக்தியை மீட்டெடுக்க உதவியது.
இதையும் படிங்க : தலை சுற்றும், பார்வை மங்கும்.. ஹைப்பர்டென்ஷன் இருக்கா? இந்த 5 ஆசனங்கள் வேண்டாம்!
கலோரிகள் சேமிப்பு
இனி கலோரிகளைச் சேமிக்க தேவையில்லை.
நடைபயிற்சி
நடைபயிற்சி, நடனம் அவசியம். எனினும், உடலுக்கு கடினமான உடற்பயிற்சிகள் தேவை இல்லை. உடலுக்கு தண்டனை கொடுக்க வேண்டாம். இதனால், என் மன அழுத்தம் குறைந்தது. மேலும், எனது நரம்பு மண்டலமும் அமைதியடைந்தது.
தொடர்ச்சி
மேற்கண்ட உடற்பயிற்சியை தொடர வேண்டும். இதனால் பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு உடலும், மனதும் ஆரோக்கியம் பெறும். சுய ஒழுக்கம் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Note: இந்த அறிக்கை சமூக ஊடகங்களிலிருந்து பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. உணவு கட்டுப்பாடுக்கு முன்னர் மருத்துவ ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க : இறைச்சி சாப்பிடாமல் காலை உணவில் புரதம் பெறுவது எப்படி? ஊட்டச் சத்து நிபுணர் விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com