Benifits of creamy carrot tulsi soup: தொப்பையை குறைக்கும் கேரட் துளசி சூப் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Benifits of creamy carrot tulsi soup: தொப்பையை குறைக்கும் கேரட் துளசி சூப் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: May 7, 2025 at 6:12 pm
Updated on: May 7, 2025 at 6:14 pm
சென்னை மே 7 2025: வெயில் காலங்களில் சத்தானதும் குறைந்த கலோரி உடனும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது சிறந்ததாகும். இரவு நேரங்களில் எடுக்கும் உணவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகவும் லேசான உணவாகவும் இருக்க வேண்டும். கேரட் சூப், துளசி சூப் போன்ற சூப் வகைகளை இரவு உணவிற்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இது சிறந்த தூக்கம், ஆரோக்கியம் மற்றும் குறைந்த அளவிலான இரவு உணவிற்கு வழிவகைக்கிறது. கேரட் மற்றும் துளசி இலைகளை பயன்படுத்தி தயாரிக்கும் சூப் எடை இழப்பிற்கு உகந்தது. இது கொழுப்பின் அளவை குறைக்கிறது. இது உடலில் மெட்டபாலிசத்தை தூண்டி வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட்டில் பால், முட்டை முன்னால் வைப்பதில்லை.. ஏன் தெரியுமா? வெளியான சீக்ரெட்!
மேலும் இதில் குறைந்த கலோரிகளுடன் அதிக நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் சத்துக்கள் உள்ளன. கேரட் கண்களுக்கு நல்லது. கேரட் கண்புரை மற்றும் பிற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. இப்போது இரவில் தூங்கும் போது கூட எடையை குறைக்க உதவும் ஒரு ஹெல்தியான சூப் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் – 1 கப்
வெங்காயம் -1
பூண்டு -2 பல்லு
எலுமிச்சை சாறு – ½ டீ ஸ்பூன்
துளசி இலைகள் -¼ கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வேகமாக வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கேரட் நன்கு மசியும் வரை வேகவிடவும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி கேரட் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கேரட் விழுதினை வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் துளசி இலைகளை சேர்த்து வேக விடவும். இறுதியாக இதனுடன் உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். இப்போது ஹெல்தியான கிரீமி கேரட் துளசி சூப் தயார்.
பயன்கள்:
கேரட் ஆன்டிஆக்ஸிடன்ட்களில் செறிந்து காணப்படும். துளசி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த சூப், தூங்கும் நேரத்தில் உடல் மெட்டபொலிசத்தை தூண்டி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.
Disclaimer: (இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறிப்புகள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. உடல்நலம் தொடர்பான எந்தவொரு மாற்றங்களைச் செய்வதற்கு முன் அல்லது எந்தவொரு நோய் தொடர்பான மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்)
இதையும் படிங்க: பன்னீர் vs முட்டை: எதில் புரதச் சத்து மிகுதி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com