Health | சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய ஐந்து வழிமுறைகள் தெரியுமா?
Health | சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய ஐந்து வழிமுறைகள் தெரியுமா?
Published on: November 19, 2024 at 8:08 am
Health | இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போதும் அல்லது இன்சுலினை உடல் சரிவர செயல்படுத்தாத போதும் இந்நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய டாக்டர் சர்மிகா கூறிய ஐந்து வழிமுறைகளை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்து எடுத்தாலும் சரி எடுக்கவில்லை என்றாலும் சரி இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றலாம்.
ஆவாரம் பூ பொடி
காலையில் உணவு உண்ட பின்னரும் மாலையில் உணவு உண்ட பின்னரும் அரை டீஸ்பூன் ஆவாரம் பூ பொடியை 1/4 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். இதை குடித்த பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு ஜூஸ்
சர்க்கரை நோயாளிகள் தினமும் சுரக்காய் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் இவைகளில் ஏதேனும் ஒரு ஜூஸினை 150ml அல்லது 200 ml தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதயம் வலுபெறல்
சிவப்பு செம்பருத்தி பூவில் உள்ள ஐந்து இதழ்களை தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பின்னர் நன்கு மென்று சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நன்மை தரும்.
நடைப்பயிற்சி
சர்க்கரை நோயாளிகள் தினமும் 45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்ல ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கும்.
இரவு உணவு
இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இரவு ஏழு மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவில் மாவு சத்துள்ள உணவு வகைகள் எதுவும் இல்லாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் ஒவ்வொருவரின் உடல் நிலையும் வேறுபட்டு காணப்படுவதால் எந்த ஒரு தகவலை பின் தொடர்வதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது சிறந்தது.
இதையும் படிங்க : உடல் எடை, மன அழுத்தம் குறையும்; தினந்தோறும் குட்டி நடை: இத்தனை பலன்களா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com