Christmas Special Stamp: இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சலகம் சிறப்பு தவான் தலை வெளியிட்டுள்ளது.
Christmas Special Stamp: இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சலகம் சிறப்பு தவான் தலை வெளியிட்டுள்ளது.

Published on: December 19, 2025 at 4:38 pm
புதுடெல்லி, டிசம்பர் 19 2025: கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக இந்திய அஞ்சல் துறை கிறிஸ்மஸ் என்ற தலைப்பில் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை அன்பு அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிறிஸ்மஸ் பண்டிகையின் செய்தியை வலியுறுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அஞ்சல் தலைமையகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அஞ்சல் தலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த முயற்சி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு முக்கியமான சமூக மற்றும் மத நிகழ்வுகளை தபால் முத்திரைகள் மூலம் நினைவுகூரும் தபால் துறையின் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த அஞ்சல் தலை, வழக்கமான அஞ்சல் புழக்கத்தின் மூலம் கிறிஸ்மஸ் பண்டிகையின் மகத்துவத்தை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்.. 70 கிலோ எடை குறைத்த பெண்!
தேசிய அஞ்சல் தலைமையகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிகாரிகள், கிறிஸ்துமஸ் என்பது மத எல்லைகளைத் தாண்டிய ஒரு கொண்டாட்டம் என்றும் அது கருணை, ஒற்றுமை, அன்பு, பகிர்வு மற்றும் நல்லிணக்கம் போன்ற மதிப்புகளை ஊக்குவிக்கிறது என்றும் வலியுறுத்தினர். இந்த கிறிஸ்துமஸ் அஞ்சல் தலை, அஞ்சல் தலை சேகரிப்பாளர்களையும் பொதுமக்களையும் ஈர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு தபால் தலையின் மூலம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட்டத்தின் ஆழமான அர்த்தத்தையும் சகோதரத்துவத்திற்கான அதன் அழைப்பையும் குடிமக்களுக்கு நினைவூட்ட இந்திய அஞ்சல் துறை முயல்கிறது. இந்திய அஞ்சல் துறையால் புதிதாக வெளியிடப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் அஞ்சல் தலை, குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் என்றும், பண்டிகைக் காலத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தலை சுற்றும், பார்வை மங்கும்.. ஹைப்பர்டென்ஷன் இருக்கா? இந்த 5 ஆசனங்கள் வேண்டாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com