Food: குழந்தைகள் விரும்பும் வெஜ் மஞ்சூரியன் இப்படி செஞ்சு பாருங்க.
Food: குழந்தைகள் விரும்பும் வெஜ் மஞ்சூரியன் இப்படி செஞ்சு பாருங்க.
Published on: April 19, 2025 at 1:22 pm
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான வெஜ் மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
வெஜ் உருண்டை தயாரிக்க
கேரட் -1கப்
முட்டைகோஸ் -1கப்
பீன்ஸ் -10
மிளகாய் தூள் -½ டீஸ்பூன்
மிளகு – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மைதா மாவு -2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கிரேவி தயாரிக்க
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி- 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு -1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
குடைமிளகாய் -1
சில்லி சாஸ் -1 டேபிள் ஸ்பூன்
டோமேட்டோ கெட்சப் -1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ்- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- சிறிதளவு
மிளகு – சிறிதளவு
ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ,பொடியாக நறுக்கிய பீன்ஸ், மிளகாய் தூள், மிளகு, தேவையான அளவு உப்பு, மைதா மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். மாவை திரட்டும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
மாவு உருண்டை பிடிக்க முடியாத நிலையில் இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்த உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். உருண்டைகள் எண்ணெயில் சேர்க்கும் பொழுது பிரிந்து வந்தால் சிறிது மைதா மாவு அல்லது சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க : ஸ்வீட் கான், குடை மிளகாய் இருக்கா? வீட்டிலேயே பீட்சா ரெடி பண்ணலாம்!
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் சில்லி சாஸ், டோமேட்டோ கெட்சப், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து இதனுடன் சேர்த்து கலந்து விடவும். கிரேவி கெட்டியானதும் இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த உருண்டைகளை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறவும். இப்போது சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் தயார். இது ப்ரைட் ரைஸ், நான் மற்றும் புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : Bhel Puri: ரோட்டு கடை பேல் பூரி வீட்டிலேய செய்யலாம்.. டேஸ்ட் கொஞ்சம் கூட மாறாது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com