How to make spanish omelette | சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make spanish omelette | சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: November 20, 2024 at 8:50 am
Updated on: November 20, 2024 at 9:28 am
How to make spanish omelette | எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று ஆம்லெட். இதை எளிதாகவும் விரைவாகவும் தயார் செய்து விடலாம். இதேபோன்று எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை -4
உருளைக்கிழங்கு -4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்-3
உப்பு- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் -1 டீஸ்பூன்
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை லேசான சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறியதும் அதனுடன் நீள வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் உப்பு, மிளகு தூள் மற்றும் சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து கலந்து விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். ஏற்கனவே வறுத்து வைத்த வெங்காயம் உருளைக்கிழங்கு கலவையை இந்த முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
இந்த கலவையை 15 நிமிடத்திற்கு ஊற விட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆம்லெட் மிகவும் வாசமாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்து வைத்த முட்டை கலவையை சேர்த்து அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து ஐந்து நிமிடம் ஆம்லெட்டை வேக விட வேண்டும்.
ஆம்லெட் மிகவும் தடிமனாக இருப்பதால் சாதாரணமாக திருப்பி போட முடியாது எனவே ஆம்லெட் தயார் செய்த தவாவோடு ஆம்லேட்டை ஒரு தட்டில் மாற்றி பின்னர் தவாவில் எண்ணெய் தடவி ஆம்லேட்டின் மறுபக்கம் ஐந்து நிமிடம் வேக விட வேண்டும். ஆம்லெட் வெந்த பின்னர் இதனை வேறு பாத்திரத்தில் மாற்றவும். ஆம்லேட்டை கத்தியை வைத்து சிறு துண்டுகளாக பீட்சா கட் பண்ணுவது போல் கட் செய்து பரிமாறவும். இப்போது சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் தயார்.
இதையும் படிங்க : சுவையான நாட்டுக் கோழிக் குழம்பு; கிராமத்து ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com