Food: சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்க சூப்பரான உருளைக்கிழங்கு ரோஸ்ட் இப்படி பண்ணுங்க.
Food: சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்க சூப்பரான உருளைக்கிழங்கு ரோஸ்ட் இப்படி பண்ணுங்க.

Published on: December 19, 2025 at 1:51 pm
சென்னை, டிச.19, 2025: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -4
தனியா -1½ டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
சோம்பு – ¾ டீஸ்பூன்
வர மிளகாய் – 5 ( காரத்துக்கு ஏற்ப சேர்க்கவும் )
கடலை எண்ணெய் -½ ஸ்பூன்
நெய் -1 ½ டேபிள்ஸ்பூன்
கடுகு -½ ஸ்பூன்
உளுந்து -½ ஸ்பூன்
வரமிளகாய் -2
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் தனியா சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேறு பாத்திரத்தில் மாற்றவும். அதே கடாயில் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்த பின்னர் இதையும் ஏற்கனவே வறுத்த தனியாக உடன் சேர்த்துக் கொள்ளவும். கடாயில் வரமிளகாய் சேர்த்து வரமிளகாயின் மீது சிறிது கடலை எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். வருத்த பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து நெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுந்து, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின் இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து கலந்து விடவும். பொடியை சேர்த்தவுடன் அடுப்புத்தீயை லோ பிளேமில் வைத்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த பின்னர் சிறிது தண்ணீர் உருளைக்கிழங்கு மீது சேர்த்து பிரட்டி விடவும். இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார். இது சாம்பார் சாதம், ரசம், தயிர் சாதம், மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: பத்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரைடு ரைஸ்.. வீட்டிலேயே செய்யும் வழிமுறை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com