Food: மூட்டு வலியை போக்கும் ஹெல்தியான பிரண்டைக்காய் துவையல் இப்படி செஞ்சு அசத்துங்க.
Food: மூட்டு வலியை போக்கும் ஹெல்தியான பிரண்டைக்காய் துவையல் இப்படி செஞ்சு அசத்துங்க.
Published on: April 25, 2025 at 2:52 pm
மிகவும் சுவையான ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய பிரண்டைக்காய் துவையல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரண்டைக்காய் – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் -3
பூண்டு -5 பல்லு
பெருங்காயம் -1துண்டு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரண்டைக்காயில் உள்ள நாரை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த பிரண்டை காயை சேர்த்து வறுக்கவும். பிரண்டைக்காய் நன்கு வதங்க வேண்டும். பிரண்டைக்காய் நன்கு வறுபடவில்லை என்றால் நாக்கு சுனைக்கும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். உளுந்தம் பருப்பு பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் வர மிளகாய், பூண்டு, பெருங்காயத் துண்டு சிறிய, நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வறுக்கவும்.
இவை ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் ஏற்கனவே வறுத்து வைத்த பிரண்டை காயினை சேர்த்து துவையலுக்கு தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். துவையல் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான பிரண்டைக்காய் துவையல் தயார். இந்த பிரண்டைக்காய் துவையலை சுடு சாதத்துடன் நெய் சேர்த்து புரட்டி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க :பால், முந்திரி போதும்… வீட்டிலேயே குல்பி ஐஸ் ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com