Food | ஒரே ஒரு முருங்கைக்காயில் திருநெல்வேலி ஸ்பெஷல் இடிசாம்பார் வைப்பது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
February 6, 2025
Food | ஒரே ஒரு முருங்கைக்காயில் திருநெல்வேலி ஸ்பெஷல் இடிசாம்பார் வைப்பது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Published on: September 20, 2024 at 9:19 am
Food | பொதுவாக வீடுகளில் வாரம் ஒரு முறை சாம்பார் செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திருநெல்வேலி ஸ்பெஷல் ரெசிபி இடி சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
செய்முறை
முதலில் துவரம் பருப்பினை நன்கு கழுவி குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் மல்லி விதைகள், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து சிவந்து வாசம் வரும் வரை அடுப்பு தீயை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும். இவை ஆறியதும் உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்வது வழக்கம் (உரல் அல்லாதோர் அம்மி அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்)
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்ததும் அதனுடன் எடுத்து வைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ( மாங்காய் இறுதியில் சேர்க்க வேண்டும்) இதனுடன் அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் இதனுடன் இடித்து வைத்த சாம்பார் பொடியில் ஒரு ஸ்பூன் தனியே எடுத்து வைத்து மீதமுள்ள பொடி மற்றும் மாங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் வெந்ததும் அதனுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் வேகவைத்த துவரம் பருப்பினை சேர்த்துக் கலந்துவிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் முதலில் எடுத்து வைத்த ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சாம்பார் கொதித்து தயார் நிலையில் வந்ததும். எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான இடி சாம்பார் தயார். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்ல கத்தரிக்காய் இருக்கா? இந்த டிஸ் ட்ரை பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com